சென்னை யூத கல்லறை
யூத கல்லறை என்பது இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த வெளிநாட்டு (பரதேசி) யூதர்களுக்கான கல்லறை ஆகும். இது இலாயிட்சு சாலையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க யூத மக்கள் தொகை கொண்ட சென்னையின், ஒரே நினைவுச் சின்னமாக இந்த கல்லறை திகழ்கிறது. இது இப்போது கிட்டத்தட்ட அழிந்து விட்டது. இங்குள்ள சுடுகாட்டில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த யூத வைர வியாபாரிகளின் கல்லறைகளும் இடம்பெற்றுள்ளன. கல்லறையில் 30 க்கும் குறைவான கல்லறைகளே உள்ளன. இவற்றுள் சில கல்லறைகள் 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை. மெரினா மீன் சந்தைக்கு மேற்கில் உள்ள சாலையின் ஒரு மோசமான சந்தைப் பகுதியில் இந்த கல்லறை அமைந்துள்ளது. பஹாய் நம்பிக்கை மற்றும் சீன கல்லறைகளுக்கு அருகில் உள்ளது. கல்லறையில் முன்பு ஒரு இரும்பு வாயில் கதவு இருந்தது. அதில் ஒரு தகடு இணைக்கப்பட்டது. அதில் டேவிட் நட்சத்திரம் மற்றும் "யூத கல்லறை" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பிறகு, இந்தக் கதவுகள் நீக்கப்பட்டு உறுதியான கதவுகள் பொருத்தப்ப்பட்டன. புனரமைக்கப்படுவதற்கு முன்பு, மயானம் கடுமையான பழுதடைந்த நிலையில் இருந்தது. துருப்பிடித்த இரும்பு கதவுகள், ஓரளவு வளர்ந்த புதர்கள் மற்றும் விரிசல் சுவர்கள் என்று பழுதடைந்திருந்தது. மயானத்தின் இருப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் கவனிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு வரை, இது குறைவான பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.


